இப்படியொரு அழகுக்கு ஏன் கல்யாணம் ஆகல? திரிஷா போஸ்டரை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..

Trisha Ponniyin Selvan: I
By Edward Jul 07, 2022 12:08 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை திரிஷா. 1999ல் சென்னை அழகியாக தேர்வு செய்யப்பட்ட பின் ஜோடி படத்தில் நடித்தும் கதாநாயகியாக மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

பின் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக தம்ழி, தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்து வந்தார். அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கமல், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த திரிஷா இடையில் காதல் கிசுகிசு, நிச்சயம் போன்றவற்றின் தோல்வியால் சினிமாவில் இருந்து கவனத்தை தொலைத்தார்.

தற்போது 39 வயதாகும் நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக இருந்து வருகிறது. அதன்பின் மார்க்கெட் இழந்த திரிஷா மீண்டும் 96 படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்தார்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள திரிஷாவின் குந்தவை போஸ்டர் இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் இத்தனை அழகை வைத்துள்ள திரிஷாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகாது ஏன் என்று புலம்பி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.