மன்சூர் அலி கான் பேச்சுக்கு பொங்கிய த்ரிஷா.. அந்த ஹீரோவை மட்டும் பாராட்டுவதா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
நடிகர் மன்சூர் அலி கான் கொச்சையாக த்ரிஷாவை பற்றி பேசியது பெரிய சர்ச்சையான நிலையில், அதற்கு நடிகை த்ரிஷா கடும் கோபமாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இவரை போன்ற ஒருவருடன் இதுவரை நடிக்காததே நல்லது, இனியும் என் வாழ்க்கையில் அவருடன் நடிக்க மாட்டேன் என கூறி இருந்தார்.
இந்நிலையில் ஹிந்தியில் ரன்பீர் கபூர் - ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்திருக்கும் அனிமல் படத்தை த்ரிஷா பாராட்டி இருக்கிறார்.
'ப்பா.. cult படம்' என வியந்து த்ரிஷா பதிவிட்டு இருக்கிறார். அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கி இருக்கும் அந்த படத்தில் பெண்களை சரியாக மதிக்காத ஹீரோவாக தான் ரன்பீர் இருக்கிறார்.
மன்சூர் அலி கான் விஷயத்தில் பொங்கிய த்ரிஷா பெண்கள் கண்ணியம் பற்றி பாடம் எடுத்து ஒரு வாரம் கூட ஆகல, இந்த படத்திற்கு இப்போது பாரட்டுகிறார் சரியா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ட்ரோல்கள் வந்ததால் த்ரிஷா அந்த பதிவை நீக்கிவிட்டார்.