Al சூர்யாவுடன் திரிஷாவுக்கு திருமணமா!! வாய்த்திறந்த திரிஷாவின் அம்மா..
தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் சிறு ரோலில் நடித்து சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை பெற்று தமிழில் மெளனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன்பின், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையில் காதல் சர்ச்சை, தொழிலதிபருடன் திருமணம் வரை சென்று நின்று போன சம்பவம் போன்றவற்றால் மார்க்கெட்டை இழந்து வந்தார். தற்போது மீண்டும் தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
லியோ, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார் திரிஷா. இப்படியொரு சூழலில் திரிஷா என் பொண்டாட்டி என்றும் நவம்பர் மாதம் எங்களுக்கு கல்யாணம் என்று ஏ எல் சூர்யா என்பவரை பேசி வருவது சர்ச்சையை கிளப்பி வருகிறது.
மேலும் விக்ரம், விஜய் மற்றும் பல நடிகர்களை கண்டபடி கெட்டவார்த்தைகளால் திட்டியும் வருகிறார். இதுகுறித்து திரிஷா தரப்பில் அமைதியாக இருந்து வந்த நிலையில், திரிஷாவின் அம்மா இது பற்றி வாய்ந்திறந்துள்ளாராம்.
அந்த நபர் பேசி வருவதை கண்டுக்கொள்ளாமல் இருக்க வேண்டும். என்ன உண்மை என்று மக்களுக்கு தெரியும் என்றும் வீணாக இந்த பிரச்சனைக்குள் தலையிட்டால் பரபரப்பாக பேசப்படும் என்று கூறியிருக்கிறாராம் திரிஷா அம்மா. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் அந்தகன் ஊடகத்தின் பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார்.