இத்தனை கோடி சொத்து இருந்தும் திருமணமாகாமல் தனிமை! 39 வயசு நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு..
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது 20 வருடங்களுக்கு மேல் சினிமாத்துறையில் இருந்து வருகிறார். காதல் தோல்வி, நிச்சயம் வரை நின்ற திருமணம் என்று சில பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட்டையும் இழந்தார்.
மீண்டும் தன்னுடைய இடத்தினை பிடிக்க 96 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதன்பின் அவர் நடித்த சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றது. தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்து வருகிறார்.லட்சத்தில் ஆரம்பத்தில் சம்பளம் வாங்கி தற்போது கோடியில் சம்பளம் வாங்கி வருகிறார்.
அம்மா பாட்டியுடன் வசித்து வரும் சென்னை வீட்டின் மதிப்பு சுமார் 6 கோடி மதிப்பாம். மேலும் ரேஞ்ச்ரோவர் எவோக் 63 லட்சம், 41 லட்சம் மதிப்பு உடைய பிஎம்டபிள்யூ மற்றும் 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் போன்ற கார்களையும் திரிஷா வைத்துள்ளார்.
தற்போது திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு 75 கோடியில் இருந்து 80 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது பொன்னியின் செல்வம் படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை கோடியில் உயர்த்துவார் என்றும் கூறப்படுகிறது..