விவாகரத்து..அப்படியொரு வாழ்க்கை வேண்டாம்..உறுதியாக இருக்கிறேன்!! நடிகை திரிஷா இப்படி கூறியிருக்கிறாரா?

Trisha Gossip Today Marriage Divorce Tamil Actress
By Edward Mar 12, 2026 06:30 AM GMT
Report

நடிகை திரிஷா

விஜய் - திரிஷா இருவரும் திருமணத்திற்கு ஜோடியாக வந்த விஷயம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், பல பிரபலங்கள் இதுகுறித்து விமர்சித்து பேசி வருகிறார்கள்.

இதனையடுத்து திரிஷாவுக்கு 2015ல் நடந்த நிச்சயதார்த்தம் நின்று போனது பற்றி திரிஷா கூறிய காரணம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், திருமணம் குறித்து திரிஷா பகிர்ந்து கொண்ட கருத்துக்களும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

விவாகரத்து..அப்படியொரு வாழ்க்கை வேண்டாம்..உறுதியாக இருக்கிறேன்!! நடிகை திரிஷா இப்படி கூறியிருக்கிறாரா? | Trisha Old Interview About Marriage Divorce Viral

அப்படியொரு வாழ்க்கை வேண்டாம்

கடந்த 2016ல் திரிஷா கொடுத்த பேட்டியில், நான் திருமணத்திற்கு முன் என் கணவராக வரப்போகிறவரிடம் இவர்தான் என்னுடையவர், அவருடன் தான் இந்த வாழ்க்கையை வாழப்போகிறேன் என்று நான் உணரவேண்டும். ஏனென்றால் எனக்கு விவாகரத்து செய்வது துளியும் நம்பிக்கை இல்லை.

திருமணத்திற்குப்பின் நான் ஒருபோதும் விவாகரத்து செய்யமாட்டேன். திருமணம் செய்வதற்கு முன் 100 முறை யோசித்துத்தான் முடிவெடுப்பேன், நான் வேறொருவரை காயப்படுத்தவோ அல்லது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழவோ விரும்பவில்லை.

விவாகரத்து..அப்படியொரு வாழ்க்கை வேண்டாம்..உறுதியாக இருக்கிறேன்!! நடிகை திரிஷா இப்படி கூறியிருக்கிறாரா? | Trisha Old Interview About Marriage Divorce Viral

என்னைச்சுற்றி இருக்கும் பலரும் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் அவர்கள் கொஞ்சமும் சந்தோஷம் இல்லாமல் வாழ்கிறார்கள், எனக்கு அப்படியொரு வாழ்க்கை வேண்டாம்.

திருமணம் 2வது விஷயம் தான். அதற்கு முதல் எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் நான் அவரை காதலிக்க தொடங்குவேன். அதன்பின் தான் திருமணம் செய்து கொள்வேன். அப்படிப்பட்ட ஒரு துணையை நான் நிச்சயம் சந்திப்பேன், அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று திரிஷா தெரிவித்துள்ளார். தற்போது அவரின் கருத்து இணையத்தில் பகிரப்பட்டு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.