அஜித் சார் நம்பர் மட்டும் இல்லை!! ஆனா விஜய், தனுஷோடது இருக்கு.. ஓப்பனாக பேசிய நடிகை திரிஷா..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பல ஆண்டுகள் மார்க்கெட் இல்லாமல் இருந்தார். காதல் மற்றும் நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணத்தால் மன உளைச்சலில் இருந்த திரிஷா பல ஆண்டுகள் கழித்து 96 படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாகவும் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் கதாநாயகியாகவும் நடித்து தன் மார்க்கெட்டை ஏற்றினார்.

தற்போது அஜித், கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக நடிகை திரிஷாவை பற்றிய பல விசயங்கள் பேசி பொருளாக மாறியிருந்தது. விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து கூட்டணி சேர்ந்ததோடு மட்டும் இல்லாமல் லியோ படத்தில் லிப்லாக் காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தன்னை மோசமான வர்ணித்து பேசிய மன்சூர் அலிகான் மீது புகாரளித்தும் இருந்தார். மேலும் விஜய்யுடன் ரகசிய காதல் என்ற சர்ச்சை செய்திகள் வெளியான நிலையில் திரிஷா நடிகர்களின் மொபைல் நம்பரை எந்த பெயரில் சேவ் பண்ணி இருப்பது பற்றி பேசியிருக்கிறார்.
சிம்பு பெயரை SIM என்றும் தனுஷ் பெயரை டி என்றும் விஜய் சேதுபதியை வி எஸ் என்றும் சேவ் செய்வேன். விஜய் பெயரை வி என்றும் சியான் விக்ரமை கெனி என்று சேவ் செய்து வைப்பேன். அஜித் சார் நம்பர் என்னிடம் இல்லை. ஆர்யாவை ஜேம் என்றும் சேவ் செய்து வைப்பதாக திரிஷா ஓப்பனாக பேசியிருக்கிறார்.