திருமணம் செய்து விவாகரத்து பெற விருப்பமில்லை.. 39 வயதில் திரிஷா கூறிய உண்மை..
தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் கதாநாயகியின் தோழி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா, மெளனம் பேசியது படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின், அஜித், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.
ராணா டகுபதியுடன் காதல்
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த திரிஷா, தொழிலதிபர் ஒருவருடன் சில ஆண்டுகளுக்கு முன் நிச்சயதார்த்தத்தை முடித்தார். ஆனால் சில காரணங்களால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதன்பின் ராணா டகுபதியுடன் காதல் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் மார்க்கெட் இழந்து படவாய்ப்புகளை பெறாமல் இருந்து வந்தார். அதன்பின் விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து தன் இடத்தை மீண்டும் பிடித்தார்.

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்
சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை-யாக நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வரும் திரிஷா 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்டால் எனக்கு கூட தெரியாது. வாழ்நாள் முழுவதும் என்னுடன் செர்ந்திருக்கக்கூடிய மனிதர் இவர் தான் என்று தோன்ற வேண்டும். திருமணம் செய்து பின் விவாகரத்து பெற எனக்கு விரும்பம் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை திரிஷா.
