கமலுக்காக இப்படியொரு போட்டியா? நயன் தாரவை தொடர்ந்து அந்த இயக்குனருக்காக அடம்பிடிக்கும் திரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதற்கு பின் பல படங்களில் கமிட்டாகி வரும் நயன், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று சமீபத்திய விருதுவிழா மேடையில் கூறியிருந்தார். அதுவும் எப்போதும் இல்லாமல் மேடையிலேயே மணிரத்னமிடம் பகிரங்கமாக வாய்ப்பையும் கேட்டிருக்கிறார்.
அதற்கு ஏற்ப இந்தியன் 2 படத்திற்கு பின் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியது. லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் கமல் ஹாசனின் 234 வது படத்தில் இணைந்துள்ளார்கள் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக இதுவரை கமல் ஹாசனுடன் சேராத நடிகை நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்ற நினைப்பில் மணிரத்னம் இருந்து வருகிறாராம்.
அதேபோல் திரிஷாவுடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அப்படி இரண்டு நடிகைகளில் ஒருவர் கமலுடன் ஜோடி சேர்வார்களா அல்லது இருவரும் இணைந்து நடிப்பார்களாக என பேச்சு மணிரத்னம் முடிவில் தான் இருக்கிறது.
