மூன்றே நாளில் தளபதி படத்தில் இருந்து தெறித்து ஓடிய திரிஷா.. இது தான் உண்மையா?

Trisha
By Edward 1 மாதம் முன்
Edward

Edward

Report
255 Shares

வாரிசு படத்துக்கு பின் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் லியோ என்ற பெயரில் பிரமோ வீடியோ வெளியாகி வைரலானது.

பல முன்னணி நட்சத்திரங்கள் கூட்டணியில் LCU வடிவில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் நடிப்பது பலரின் எதிர்பார்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில் திரிஷா லியோ படத்தின் முழு கதையை கேட்டு மூன்றே நாளில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னை வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்றே நாளில் தளபதி படத்தில் இருந்து தெறித்து ஓடிய திரிஷா.. இது தான் உண்மையா? | Trisha Out Leo Vijay Lokesh Movie Reason

அதாவது லோகேஷ் படம் என்றால் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவாக இருப்பதால் முழு கதை கேட்ட திரிஷாவுக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்துள்ளதாம். ரீஎண்ட்ரி கொடுக்க நினைத்து விஜய் படத்தில் கமிட்டாகிய திரிஷா லியோ படம் தொடர்பாக போட்ட பதிவை எடுத்துள்ளது சற்று சலசலப்பை கொடுத்துள்ளது.

ஆனால் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் மட்டும் அப்படியே இருப்பதால் திரிஷா லியோ படத்தில் இருந்து வெளியேறவில்லை என்றும் கூறுகிறார்கள்