மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்!! நடிகை திரிஷாவின் ரியாக்ஷன் இதுதான்..
தென்னிந்திய சினிமாவில் கடந்த வாரம் முதல் இன்று வரை பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் பேசியதுதான். லியோ படத்தின் வெற்றி விழாவில் இந்த விஷயத்தை சொல்லி இருப்பேன் ஆனால் கலவரம் பண்ண சில பேர் இருக்கிறார்கள் அதனால் சும்மா இருந்துவிட்டேன்.
திரிஷா உடன் நடிக்கிறோம் பெட்ரூம் சீன் இருக்கும் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷா போடலாம் என்று நினைத்தேன் என மன்சூர் அலி கான் கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று கூறியதால் காவல் நிலையம் வரை சென்றார். இந்நிலையில் இன்று மன்சூர் அலிகான் திரிஷாவிடன் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இதற்கு நடிகை திரிஷா, ”தவறுவது செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்” என்று கூறி கையெடுத்து கும்பிடும் இமோஜியை பயன்படுத்தி ஒரு பதிவினை போட்டுள்ளார். இதற்கு பலர் பாராட்டினாலும் அப்படியென்றால் நீங்கள் தெய்வமா? என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.