காஜல் அகர்வால் வேண்டாம் இந்த நடிகைதான் வேண்டும்! கமலுக்காக இயக்குநர் சங்கர் எடுத்த அதிரடி..
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் சங்கர். தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் ஒன்றினை எடுத்து வருகிறார். இதன்பின் தன் இரண்டாம் மகள் அதிதி சங்கரை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதற்கிடையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த சங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பினை மீண்டும் துவங்க இருப்பதாக முடிவெடுத்துள்ளார். நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின் படங்களில் கமிட்டாகி இருந்ததில் இருந்து விலகி வருவதாக கூறப்படுகிறது.
அதற்கு காரணம் கர்ப்பமாக இருப்பதாலும் குடும்பத்தில் சில கட்டுப்பாடுகள் வைத்திருப்பதாலும் என்று செய்திகள் பரவி வருகிறது. தற்போது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்தியன் 2 படத்தினை மீண்டும் எடுக்கவுள்ளனர்.
இந்நிலையில் காஜல் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக 90ஸ் கனவுக்கன்னி நடிகை திரிஷாவை நடிக்கவைப்பதாக முடிவெடுத்துள்ளாராம். அதற்காக நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.