Suchi Leaks -க்கு அவர்கள் தான் காரணம்.. சுசித்ராவுக்கு திரிஷா கொடுத்த பதிலடி!!

Dhanush Trisha Indian Actress Suchitra Actress
By Dhiviyarajan May 15, 2024 05:26 AM GMT
Report

கடந்த 2016 -ம் ஆண்டு பிரபல பாடகி சுசித்ரா, சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் நடிகைகளின் சில அந்தரங்க விஷயங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தனர்.

அதில் திரிஷா, ஆண்ட்ரியா, நிக்கி கல்ராணி, அனுயா நடிகைகளின் புகைப்படங்கள் லீக் ஆகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுசித்ரா மீண்டும், சுசி லீக்ஸ் விவகாரம் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் அவர், "சுசி லீக்ஸ் இந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தனுஷ் சேர்ந்து தான் இந்த பிராங்க் செய்துவிட்டனர். பிராங்க் செய்ய எதாவது அக்கவுண்ட் தேவைபடும் என்பதால் கார்த்திக் என்னுடைய அக்கவுண்ட்டை கொடுத்துவிட்டார். திரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார்" என்றும் சுசித்ரா தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், "நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது" என்று திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பதிலடி கொடுத்து இருக்கிறார்.