சண்டிகர் தொழிலதிபருடன் திருமணமா? திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன் இதுதான்..
திரிஷா
2001ல் மிஸ் இந்தியாவில் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதினை பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்து தற்போது தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார் நடிகை திரிஷா.
25 ஆண்டுகளாக தன்னுடைய இளமையான, வசீகரிக்கும் தோற்றத்தால் தன்னுடைய ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகை திரிஷா, நடிகர் விஜய்யுடன் பல இடங்களுக்கு செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் இருவரை வைத்தும் காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது கசிந்தது.
இதற்கிடையில் திரிஷா கிருஷ்ணன், இறுதியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
திருமணமா?
திரிஷாவின் பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் அவரின் வருங்கால கணவர் பஞ்சாபில் உள்ள சண்டிகரைச் சேர்ந்தவர் என்பதும் ஆஸ்திரேலியாவில் பல வணிகங்களை அவர் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் தனது வணிகத்தை இந்தியாவிலும் தொடங்கியுள்ளாராம். திரிஷாவின் குடும்பத்திற்கும் அவரது வருங்கால கணவரின் குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு இருப்பதால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த தகவலை திரிஷாவின் தாயார் மறுத்துள்ளார்.
திரிஷா அம்மா
அவர் கூறுகையில், இது அடிக்கடி வரும் தகவல்தான், இதில் உண்மை இல்லை, திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம் தான், என்று சித்தபடி கூறியதாக மற்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வதந்திகளாக பரவி வந்தாலும் இதுகுறித்து திரிஷா ஏதாவது ஒரு பதிவு போட்டால் தான் உண்மை என்னவென்று தெரியவரும்.