நடிகர் சூர்யாவின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு இவ்வளவு கோடியா! அடேங்கப்பா
திரையுகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சூர்யா, இந்த ஆண்டு ரெட்ரோ படத்தை கொடுத்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் கருப்பு படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்திலிருந்து டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது தனது 46வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சூர்யா. இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க சூர்யாவுடன் முதல் முறையாக மமிதா பைஜூ இணைந்து நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யாவுக்கு சென்னை தியாகராய நகரில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டிற்கு லட்சுமி இல்லம் என பெயர் உள்ளது. தனது தாய்யின் பெயர் இந்த வீட்டிற்கு சூர்யா வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் விலை மதிப்பு மட்டுமே ரூ. 45 கோடி - ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.