அந்த நடிகருக்கு நோ சொன்ன த்ரிஷா.. மாபெரும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இவர், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக த்ரிஷா நடிப்பில் குட் பேட் அக்லி, விஸ்வம்பரா, ராம் என பல்வேறு மொழிகளில் படம் உருவாகி வருகிறது. முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் பணிபுரிந்து வரும் த்ரிஷா, இயக்குநர் ராஜமௌலி படத்தை தவறவிட்டுள்ளார் எண்ட்ட்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..?.
ஆம், இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு உருவான படம் மரியாதை ராமன்னா. இப்படத்தில் சுனில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க வைக்க முடிவு செய்த ராஜமௌலி, த்ரிஷாவை அணுகி கதை கூறியுள்ளார்.
ஆனால், இப்படத்திற்கு முன் சுனில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்ததால், அவருக்கு ஜோடியாக நடித்தால், தன்னுடைய கேரியர் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு நடிக்க மறுத்துவிட்டாராம். இப்படத்தின் வாய்ப்பை த்ரிஷா மறுத்த நிலையில், அதன்பின் தன்னுடைய எந்த படத்திலும் த்ரிஷாவை இயக்குநர் ராஜமௌலி நடிக்க வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.