அந்த விசயத்தில் நயன்தாராவை மிஞ்சுவாரா நடிகை திரிஷா!! Roadல் போராடு குயின் நடிகை..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து சில வருடங்களாக மார்க்கெட் குறைந்து தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து வருபவர் நடிகை திரிஷா.
96 படத்திற்கு பின் பொன்னியின் செல்வன் கொடுத்த மிகப்பெரிய ஸ்கோப் திரிஷாவின் மார்க்கெட்டை அப்படியே எகிற வைத்துள்ளது. அப்படி விஜய், ரஜினி, கமல், தனுஷ், சல்மான் கான் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடிப்போட கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் சோலோ நடிகையாக நடிகை நயன் தாரா பல படங்களில் நடித்து வெற்றியை கண்டு வந்தார்.
ஆனால் அவர் நடிப்பில் சோலோ ஹீரோயினாக நடித்த படம் வெற்றியை காணவில்லை. அதேபோல் தான் சமீபத்தில் நடிகை திரிஷாவும் அதை ஆரம்பித்தார். அவர் நடிப்பில் இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோட் என்ற படம் வெளியாகவுள்ளது.
அப்படத்தின் டிரைலர் இன்று வெளியான நிலையில், உண்மையில் நடந்த ஒரு சம்பவமாக, ரோட்டில் நடக்கும் விபத்தை வைத்து உருவாகியுள்ளது.
இதில் திரிஷா படும் கஷ்டத்தை வைத்து கதை நகரும் என்று தெரிகிறது. இப்படமாவது நடிகை திரிஷாவுக்கு சரிபட்டு வருமா வராதா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.