கோவிலுக்கு சென்று சர்ச்சை ஏற்படுத்திய கனவுக்கன்னி நடிகை! இந்த இயக்குநர் தான் காரணம்..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக இருந்து சில காலங்கள் விலகி இருந்து மார்க்கெட்டைஇழந்தவர் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு பிரபலமான திரிஷா காதல் நிச்சயதார்த்தம் என சிக்கலில் சிக்கி மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இதற்கு பின் வாய்ப்புகள் குறைந்து மார்க்கெட்டை இழந்து தவித்த திரிஷா விஜய் சேதுபதியின் 96 படத்தில் நடித்து மீண்டும் தன் இடத்தினை பிடித்தார். தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் திரிஷா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செலவன்படத்தில் கமிட்டாகி மத்திய பிரதேச படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்து சில நடிகர் நடிகைகள் சென்னை திரும்பிய புகைப்படங்கள் வைரலானது. அதேபோல் திரிஷா நடித்த சில காட்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் படகிலிருந்து இரங்கி சிவலிங்கம் நந்திக்கு இடையே நடந்து வந்த திரிஷா காலணியுடன் வந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் கோபத்தில் திரிஷாவையும் படத்தின் இயக்குநர் மணிரத்னத்தையும் கைது செய்யுமாறு புகார் கொடுத்துள்ளனர் இந்து அமைப்பினர்.