கோடியில் புறளும் திரிஷா!! சொத்து மதிப்புக்கு பின் உள்ள ரகசியம்..

Trisha Tamil Actress Net worth
By Jai Aug 23, 2026 02:30 AM GMT
Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தான் சமீபகாலமாக பேசு பொருளாக இருந்து வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் பதவி ஏற்பு முதல், சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சி வரை திரிஷா சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

கோடியில் புறளும் திரிஷா!! சொத்து மதிப்புக்கு பின் உள்ள ரகசியம்.. | Trisha Whooping Net Worth Salary Assets

தற்போது லியோ, கருப்பு படங்களில் வெற்றிக்கு பின் திரிஷா சம்பளம் ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை வாங்கிருந்ததை ரூ. 12 கோடியாக உயர்த்தி இருக்கிறார். நடிப்பு தாண்டி பிராண்ட் அம்பாஸ்டராகவும் திகழ்ந்து வரும் திரிஷா ஆண்டுக்கு சுமார் ரூ. 9 கோடி வருமானமாக சம்பாதிக்கிறார்.

சென்னையில் சுமார் ரூ. 10 கோடி மதிப்புள்ள பிரமாண்ட வீடும், ஹைதராபாத்தில் சுமார் ரூ. 6.5 கோடி மதிப்பிலான சொத்தும், லண்டனில் ஒரு வீடும் வைத்திருக்கிறாராம்.

கோடியில் புறளும் திரிஷா!! சொத்து மதிப்புக்கு பின் உள்ள ரகசியம்.. | Trisha Whooping Net Worth Salary Assets

சொத்து மதிப்பு

திரிஷாவிடம் பல சொகுசு கார்கள் இருக்கிறது. அதில் கார் கலெக்ஷனின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை இருக்குமாம். 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் திரிஷா, சினிமா பயணம், பிளாக்பஸ்டர் படங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள், விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகள் மூலம் ரூ. 85 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கிறாராம்.