முதலமைச்சர் விஜய்யின் மருமகளாக இந்த தகுதி இருக்கணும்!! மகன் ஜேசன் சொன்ன ரகசியம்..

Vijay Relationship Sangeetha Vijay jason sanjay
By Jai Aug 23, 2026 03:30 AM GMT
Report

ஜேசன் சஞ்சய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சிக்மா என்ற படத்தினை இயக்கியுள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க சிக்மா படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார் ஜேசன்.

முதலமைச்சர் விஜய்யின் மருமகளாக இந்த தகுதி இருக்கணும்!! மகன் ஜேசன் சொன்ன ரகசியம்.. | Vijays Son Reveals Kind Of Girlfriend Really Wants

தன்னுடைய காதலி, எப்படி இருக்க வேண்டும், எந்த விஷயங்கள் பிடிக்கும், எது பிடிக்காது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஜேசன் சஞ்சய், என்னுடைய காதலி உணவை மிகவும் விரும்புவராக இருக்க வேண்டும், என்னைப்போலவே அட்வென்ச்சராக இருக்க வேண்டும். புதுப்புது இடங்களை தேடிச்சென்று, புதிய விஷயங்கலை எக்ஸ்ப்ளோர் செய்ய விரும்புபவராக இருக்க வேண்டும். அதேபோல், பொருளாதார ரீதியாக சுயமாக இருப்பவராகவும் இருக்க வேண்டும்.

அதே சமயம், மிகவும் ஹை மெயின்டனன்ஸ் கொண்டவராக இருக்கக்கூடாது. தமிழ் படங்களையும், பாடல்களையும் பார்க்காமலும் கேட்காமலும் இருப்பது மிகப்பெரிய ரெட் பிளாக். ஏனென்றால் நான் எப்போதும் திரைப்படங்களிலிருந்து ரெஃபரன்ஸ்களையும், கவுண்டர்களையும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

முதலமைச்சர் விஜய்யின் மருமகளாக இந்த தகுதி இருக்கணும்!! மகன் ஜேசன் சொன்ன ரகசியம்.. | Vijays Son Reveals Kind Of Girlfriend Really Wants

அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அந்த வைப் இருக்காது. எனது முன்னுரிமைகளையும், என் வாழ்க்கை முறையையும் அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும், அதை புரிந்துக்கொள்ளாமல் இருந்தால், அவர்களுக்காக என்னை நானே மாற்றிக் கொள்ள முடியாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.