லியோ படத்தால் ஓட்டம் பிடித்த திரிஷா.. முக்கிய காரணமே இதானாம்...
தமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. இடையில் பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் நடிகை ஆரம்பித்துள்ளார் திரிஷா. 14 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் நடிக்க லியோ படத்தில் கமீட்டாகினார்.
சில தினங்களுக்கு முன் தான் விஜய் மற்றும் லியோ படக் குழுவினருடன் காஷ்மிர் ஷூட்டுக்கு சென்றார். ஆனால் சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங்கை கேன்சல் செய்து சென்னை திரும்பியதாக தகவல் வெளியானது.
ஆனால் அது இல்லை என்று திரிஷா அவரது இன்ஸ்டா ஸ்டோரிசை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பின்பும் திரிஷா சென்னை வந்துவிட்டார் என்ற தகவல் பரவியது. ஆனால் நடிகை திரிஷாவின் காட்சிகள் எடுக்கவில்லை என்பதால் அவருடைய காட்சி அமைக்கும் நேரம் தாமதமாகும் என்றும் ஸ்டண்ட் மாஸ்டர் படப்பிடிப்புக்கு இன்னும் வரவில்லை என்பதாலும் தான் திரிஷா சென்னை திரும்பி பின் காஷ்மிர் சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் திரிஷாவுக்கு பல சண்டை காட்சிகள் இருப்பதால் தான் ஷுட்டிங் கேன்சல் செய்திருக்கிறாராம்.

