நடிகை திரிஷாவின் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசுதே படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை பெற்றப்பின் ஜோடி படத்தில் சிறு ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமாகினார்.
அதன்பின் சூர்யா, விஜய், அஜித், விக்ரம், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து டாப் நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தார்.
இதன்பின் தொழிலதிபருடன் நிச்சயம் வரை சென்று திருமணம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. அதன்பின் தன்னுடைய மார்க்கெட்டை சுத்தமாக இழந்த திரிஷா சில நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வாய்ப்புகளை இழந்து வந்தார்.
பின் 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்ததோடு பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை ரோலில் நடித்து அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் நடிகை திரிஷா 40 வயதை தாண்டிய நிலையில் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
அதற்கு காரணம் சில பிரபலங்களின் விவாகரத்து செய்திகளை பார்த்து தான் அதை வெறுப்பதாக திரிஷா கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை திரிஷா கையில் ஒரு ஆண் குழந்தையை ஏந்தியபடி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த குழந்தை வேறு யாரும் இல்லை நடிகை மியா ஜார்ஜின் குழந்தையாம். குழந்தையின் பிறந்தநாளுக்கு திரிஷா நேரில் சென்று வாழ்த்து கூறியபோது எடுத்த புகைப்படமென்று மியா ஜார்ஜ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.