தந்தை விஜய்யின் இனிஷியலை தூக்கி போட்ட மகன் ஜேசன் சஞ்சய்? அதிர்ச்சி தகவல்...
நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இதனிடையே விஜய் - திரிஷா ஒன்றாக திருமண நிகழ்ச்சிக்கு வந்த சம்பவமும் பெரியளவில் பேசப்பட்டும் விவாதமும் ஏற்படுத்தி வருகிறது.
ஜேசன் சஞ்சய்
இதற்கிடையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து விஷயங்களும் இணையத்தில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஆக்ஷன் கதையை மையப்படுத்தி ஜேசன் ஒரு படத்தினை இயக்கி வருகிறார். அடுத்தடுத்த பணிகளை முடித்து வரும் ஜேசன் சஞ்சய் குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

S
அதாவது தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குழந்தைகளின் பெயரில், அப்பா பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக பயன்படுத்துவார்கள். ஆனால் ஜேசன் சஞ்சய் தன்னுடைய புதிய படத்திற்கான டைட்டில் கார்ட் மற்றும் கையெடுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தந்தையின் பெயருக்கு பதிலாக ஜேசன் சஞ்சய் Jason Sanjay S என்ற முறையில் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் வரும் S என்பது அவரது தாய் சங்கீதா பெயரை குறிக்கிறது என்று இணையவாசிகள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.