கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்..கெனிஷாவுக்கு பதிலடி கொடுத்தாரா ஆர்த்தி ரவி...

Gossip Today Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Jai May 16, 2026 06:32 AM GMT
Report

நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் இடையே கடந்த 2009ல் திருமணம் நடந்து 18 ஆண்டுகளாகிய நிலையில், கடந்த ஆண்டு ரவி மோகன் விவாகரத்து வழக்கை தொடர்ந்தார். இதில் ஆர்த்திக்கு உடன்பாடில்லை என்று கூறி வரும் நிலையில், ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்..கெனிஷாவுக்கு பதிலடி கொடுத்தாரா ஆர்த்தி ரவி... | Truth Always Prevails Aarti Ravi S Viral Post

ஒரு பக்கம் ரவி மோகன், கெனிஷாவுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வர, மறுபக்கம் ஆர்த்தி தன்னுடைய இரு பிள்ளைகளை சிறப்பாக வளர்த்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் பாடகி கெனிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு எமோஷனலாக பேசியிருக்கிறார்.

கெனிஷா

என் அப்பா, அம்மா 18 வயது இருக்கும் போதே இறக்க, 19 வயதில் திருமணம் செய்தபோது கணவரால் 4 மாத குழந்தை இறந்தது, அதன்பின் அந்த வாழ்க்கையில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியிருந்தார்.

மேலும் ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை, அவரது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியசர் அவர்தான், யாருடன் பழக வேண்டும் என்று முடிவெடுப்பதும் அவர்தான், அப்படி இருக்கும்போது ஏன் என்னை இழுக்கிறீர்கள் என்று பேசியிருந்தார் கெனிஷா.

கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்..கெனிஷாவுக்கு பதிலடி கொடுத்தாரா ஆர்த்தி ரவி... | Truth Always Prevails Aarti Ravi S Viral Post

அதன்பின் இணையத்தில் என்மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது, மன உளைச்சலாக இருக்கிறேன், எனது இசை பயணத்தில் இருந்தும், தெரபி பணியிலிருந்தும் சமூக ஊடகங்களில் இருந்தும் விலகுகிறேன். சென்னையை விட்டு வெளியேறுகிறேன், இனிமேல் வரமாட்டேன், பெண்ணியம் வென்றது மகிழ்ச்சி தோற்றது என்று குறிப்பிட்டிருந்தார் கெனிஷா.

இந்நிலையில் ரவியின் மனைவி ஆர்த்தி ரசி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்..கெனிஷாவுக்கு பதிலடி கொடுத்தாரா ஆர்த்தி ரவி... | Truth Always Prevails Aarti Ravi S Viral Post

ஆர்த்தி ரவி

அதில், தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பக்கூடாது, அதுவும் ஒரு தாய் சிங்கமாக அது இருந்தால் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

என் கண்ணியமான அமைதியை ஒருபோதும் பலவீனமாக நினைக்கக்கூடாது, தேவைப்பட்டால் என் குழந்தைகளையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவதற்காக என்னுடைய வசதியான வட்டத்தில் இருந்து உண்மையுடன் இந்த உலகத்தை எதிர்கொள்வேன், ஏனென்றால் உண்மை எப்போதும் வெல்லும் என்று கூறியிருக்கிறார்.

நேற்று கெனிஷா வீடியோவுக்கு பதிலடி கொடுக்கத்தான் ஆர்த்தி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.