அரியவகை நோயால் மருத்துவமனையில் சிகிச்சை.. முன்னாள் கணவர் வந்ததும் ஓடி கட்டிப்பிடித்த சமந்தா?

Samantha Naga Chaitanya
By Edward 4 மாதங்கள் முன்
Edward

Edward

Report
355 Shares

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார்.

சமுகவலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி வரும் காரணம் என்ன என்ற கேள்வி சமந்தாவிடம் எழுந்த நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவர் எடுத்த புகைப்படம் மூலம் தெரிவித்து ஷாக் கொடுத்தார்.

இதற்கு பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சமந்தாவின் முன்னாள் கணவரின் தம்பி அகில் அக்கினேனி கூட சமந்தாவுக்கு ஆறுதல் கூறி கருத்தினை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் சமந்தாவை பார்க்க நாக சைதன்யா மருத்துமனைக்கு சென்றுள்ளார் என்றும் அவரை பார்த்தது ஓடிபோய் கட்டியணைத்ததாகவும் செய்திகள் பரவியது. ஆனால் நாக சைதன்யா உண்மையில் சம்ந்தாவை பார்க்க செல்லவில்லையாம்.

இது பொய்யான தகவல் என்று கூறப்படுகிறது. மேலும் சமந்தாவின் முன்னாள் மாமனார் சந்திக்க முடிவெடுத்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.