டார்ச்சர்.. கருக்கலைப்பு.. சமந்தாவை மோசமாக கொடுமைப்படுத்திய நாக சைதன்யா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. கடந்த ஆண்டு மயோசிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இவர் சிகிச்சை மூலம் தற்போது குணமாகியுள்ளார்.
சமந்தா 2017 -ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். தென்னிந்திய சினிமாவின் மிக அழகான ஜோடியாக வலம் வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

இவர்களின் விவாகரத்திற்கு பலரும் பல வித கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் உமைர் சந்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
அதில் அவர், "நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். அவர் சமந்தாவை சித்திரவதை செய்தார். இதனால் கர்ப்பமாக இருந்த சமந்தா கருக்கலைப்பு செய்து கொண்டார்" என்று கூறியுள்ளார்.
தற்போது உமைர் சந்துவின் ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
