சின்னத்திரை நடிகையாக இருந்து ரூ. 1200 கோடி சொத்துக்கு அதிபதியாகி விலகிய ஹீரோயின்..
ஆஷ்கா கோரடியா
வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று இன்று ரூ.1200 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் ஒரு நடிகை. டிவி நடிகையாக இருந்து தொழில்துறைக்குள் நுழைந்து சாதித்தவர் தான் ஆஷ்கா கோரடியா.

2002ல் ஆஜானக் 37 சால் பாத் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து பாபி, தும் பின் ஜாவோன் கஹா என்ற சீரியலில் நடித்து மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றார்.
இதனையடுத்து இந்தி பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார். கடைசியா 2019ல் தாயன் என்ற ஹாரர் தொடரில் நடித்த ஆஷ்கா, 20 ஆண்டுகள் சின்னத்திரையில் கோலோச்சியவர் அதிலிருந்து விலகினார்.

1200 கோடி சொத்து
பின் தொழில்துறை முனைவோராக வேண்டும் என்ற கனவுடன் Rene Cosmetics என்ற மேக்கப் பிராண்ட்டை அகமதாபாத்தில் அறிமுகம் செய்து, ரூ. 50 லட்சம் முதலீட்டில் 2018ல் இந்த பிரமாண்ட்டை உருவாக்கினார்.
வெறுமனே கடைகளில் மட்டுமில்லாமல் அமேசான், ஃபிளிப்கார், நைகா, மிந்த்ரா என டிஜிட்டலிலும் விற்கத் தொடங்கினார். மேக்கப் பிராண்ட் தொடங்கிய 2 ஆண்டுகளில் ரூ. 100 கோடி வருமனத்தை ஈட்டி, தற்போது அந்த பிராண்ட் ரூ. 1200 கோடி முதல் ரூ. 1400 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து ஆஷ்கா கோரடியா கூறுகையில், 16 வயதில் மும்பைக்கு வந்தேன், 23 வயதில் மும்பையில் சொந்த வீட்டை வாங்கினேன், பெரிய கனவுகளை எப்போதும் துரத்த ஆரம்பித்து வெற்றிப்பெற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.