TVK விஜய் பிரச்சார வாகனத்தில் தாவிய சிறுவன்!! பரபரப்பான புதுச்சேரி..
TVK விஜய்
நடிகர் விஜய் குறித்து நாளுக்கு நாள் கடுமையான விமர்சனங்கல் எழுந்து வரும் நிலையில், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பரப்புரையை தொடர்ந்து செய்து வருகிறார். இன்று மார்ச் 4 ஆம் தேதி புதுச்சேரியில் தன்னுடைய ரோடு ஷோவையும் பரப்புரையையும் செய்து வருகிறார்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 1 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கி அப்படியே நடத்தி வருகிறார். இந்நிலையில் புதுச்சேரிக்கு வந்ததில் இருந்தே தொண்டர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
பரபரப்பான புதுச்சேரி
மரக்காணத்தில் கூட்ட நெரிசல் அதிகமாகி சாலையில் வாகனம் செல்லமுடியாத சூழல் உருவானது. மேலும் விஜய் வந்த காரில் சில இளைஞர்கள் தாவி குவிந்தனர். அவர்களை அங்கிருந்து பவுன்சர்கள் பிடித்து இழுத்து தள்ளினர். அப்போது ரசிகர்கள் களைந்து செல்லாமல், விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து கொண்டே இரு சக்கர வாகனத்தில் வந்ததால், அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தவளக்குப்பம் பகுதிக்கு விஜய்யின் பிரச்சார வாகனம் சென்றுக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த சிறுவன் திடீரென பிரச்சார வாகனத்தில் தாவி குடித்துள்ளான், விஜய் இதனை பார்த்து சற்று பதறிப்போக, பவுன்சர்கள் அந்த சிறுவனை இறக்கிவிட்டனர். இந்த சிறுவனின் செயலால் அங்கு சற்று நேரம் பரப்பானது.
மேலும் விஜய்யை வாகனத்தை பின் தொடர்ந்துவந்த இருச்சக்கரத்தில் வந்த இருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.