இயக்குநர், நடிகர் இப்போ அரசியல்வாதி!! சுந்தர் சி - குஷ்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Sundar C Madurai Kushboo Net worth Tamil Nadu Election 2026
By Jai Apr 04, 2026 03:30 PM GMT
Report

சுந்தர் சி - குஷ்பு

இயக்குநராகவும் நடிகராகவும் குஷ்புவின் கணவராகவும் இருந்து வரும் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும், விஷால், தமன்னாவின் புருஷன் படத்தையும் எடுத்து வருகிறார்.

இயக்குநர், நடிகர் இப்போ அரசியல்வாதி!! சுந்தர் சி - குஷ்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா? | Sundar C Khushbu Net Worth Details Nomination

சினிமாவை தாண்டி தற்போது அரசியலில் நுழைந்துள்ள சுந்தர் சி, மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் என் டி ஏ கூட்டணி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவரின் சொத்து மதிப்பும் மனைவி குஷ்புவுக்கு சொந்தமான சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தேர்தல் பணிகளை தொடங்கிய சுந்தர் சி, இன்று மனைவி மற்றும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி சண்முகத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இயக்குநர், நடிகர் இப்போ அரசியல்வாதி!! சுந்தர் சி - குஷ்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா? | Sundar C Khushbu Net Worth Details Nomination

சொத்து மதிப்பு

அவரது வேட்புமனுவின்படி, குஷ்புவிடம் ரூ. 4.80 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி, ரூ.33 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியவை உள்ளன. இவரது மொத்த அசையும் சொத்துக்கள் ரூ. 6 கோடியாகவும், அசையா சொத்துக்கள் ரூ. 4.17 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளன.

சுந்தர் சி வசம், 220 கிராம் தங்கம் உள்ளது, ரூ.28 லட்சம் மதிப்பிலான டொயோட்டா கார், ரூ.12.80 லட்சம் மதிப்பிலான கியா சோனட், ஒரு கார்னிவல் கார் உட்பட இவரது மொத்த அசையும் சொத்துக்கள் ரூ.2.97 கோடியும் அசையா சொத்துக்கள் ரூ.17.7 கோடியாகவும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார் சுந்தர் சி.