கல்வி விருதுகள் விழா!! மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக அளித்த விஜய்..

Vijay Education Thamizhaga Vetri Kazhagam
By Jai May 30, 2025 07:30 AM GMT
Report

விஜய், தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் சார்ப்பாக ஆண்டுதோறும் தேர்வு அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை கெளரவித்து வருவார்.

கல்வி விருதுகள் விழா!! மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக அளித்த விஜய்.. | Tvk Vijay Educational Awards Diamond Ear Rings

அந்தவகையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 16 மாவட்டங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருதுகளை இன்று மே 30 ஆம் தேதி வழங்கியுள்ளார்.

ஓவியாஞ்சலி - சோஃபியா

இந்நிலையில் மாநில அளவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளான ஓவியாஞ்சலி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சோஃபியாவுக்கு பாராட்டுச்சான்றிதழ், கல்வி உதவித்தொகை மற்றும் வைரக் கம்மல் பரிசாக விஜய் வழங்கியிருக்கிறார்.

கல்வி விருதுகள் விழா!! மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக அளித்த விஜய்.. | Tvk Vijay Educational Awards Diamond Ear Rings

மாணவிகள் இருவரும் தங்களது பெற்றோர்கள் முன்னிலையில் இணைந்து மிகவும் நெகிழ்ச்சியாக அவற்றைப்பெற்றுக் கொண்டனர். இருவரும் 600 மதிப்பெண்ணுக்கு 599 மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.