காசு வாங்கிட்டு காதுலயே!! சேலத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு..
தவெக தலைவர் விஜய் சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் தற்போது பேசி வருகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகிறது. அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போது சேலத்தில் பேசி வருகிறார்.

தவெக தலைவர் விஜய்
ஆரம்பத்தில் பேசிய விஜய், ஏய் விஜய் வீட்டைவிட்டு வெளியே வா, ஏய் விஜய் பனையூரை விட்டு வெளியேவான்னு சொல்றவங்களுக்கு என் வீடு எங்க இருக்குன்னு தெரியுமா. கிண்டலும் கேலி செய்ற எல்லோருக்கும் சொல்கிறேன், என் தாய்நாடான தமிழ்நாடு தான் என் வீடு, என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் இருக்காங்க, ஒட்டுமொத்த மக்களும் என் வீடு, என் சொந்தம், அவர்களுக்கு கூட இருப்பது நான் தான்.

இன்று உங்கள் விஜய், உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி கேட்க வந்திருக்கிறேன். மக்களுக்காக நியாயம் கேட்க வந்த நான், இப்போது உங்களிடம் நியாயம் கேட்கிறேன். இந்த விஜய் என்ன பண்ணான், மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். எல்லாத்தையும் ஒதுக்கு வந்தது தப்பா. மத்த கட்சிகளுக்கு எல்லாத்திற்கும் அனுமதி, ஆனால் எனக்கு மட்டும் கொடுக்கமாட்டாங்க, கொடுக்கவும் விடமாட்ட்டாங்க, இது என்ன நியாயம்.

அவங்க காதுலயே
இந்த SOP-ன்னு Standard Operating Procedure. ஆனால் எனக்கு மட்டும் ’ஸ்டாலின்’ சாரி ஸ்டாலின் சார் Operating Procedure என்று பேசியுள்ளார். மேலும் பேசிய விஜய், காசு வாங்கி ஓட்டு வாங்கிடலாம்னு கனவு காணுறாங்க, நான் வந்தா அதுவும் நடக்கவிடமாட்டேன். வண்டி வண்டியா கொட்டுவாங்க, 1000, 2000, 3000, 5000ன்னு, சாமி மேல சத்தியலாம் வாங்கிவாங்க, இத்தனை வருஷமா ஏமாத்துனாங்க. வாங்கிக்கோங்க, உங்க பணம் தான். வாங்கிக்கிட்டு அவங்க காதுலயே, அவங்க செவுல்லயே விசில ஊதுங்க என்று சரமாரியாக பேசியிருக்கிறார் விஜய்.