ஒருவழியா சிக்கிட்டான்யா.. சுந்தரி சீரியலில் வரும் பெரிய ட்விஸ்ட்

serial sun tv Sundari serial update
By Parthiban.A Jan 02, 2022 02:30 PM GMT
Report

சன் டிவியில் வரும்முக்கிய சீரியல்களில் ஒன்று சுந்தரி. கிராமத்தில் ஐஏஎஸ் கனவோடு இருக்கும் பெண்ணை திருமணம் செய்துவிட்டு, அழகு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்கி வைத்துவிட்டு சென்னையில் தனியாக இன்னொரு மாடல் பெண்ணை திருமணம் செய்யும் ஹீரோ பற்றிய கதை தான் இந்த சீரியலில்.

சுந்தரிக்கு ஹீரோ கார்த்திக் தன்னை ஏமாற்றி இன்னொரு திருமணம் செய்தது எப்போது தெரியவரும் என்பது தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்போது தான் சீரியலில் பரபரப்பு கூடும். கார்த்திக் சிக்காமல் இப்போது போலவே தொடர்ந்து காட்டப்பட்டு வந்ததால் ரசிகர்களும் சற்று சலிப்படைந்து இருந்தார்.

இந்நிலையில் கார்த்திக் சிக்கும் தருணம் வந்துவிட்டது. நாளைய எபிசோடில் கார்த்திக் பற்றிய மொத்த உண்மையும் சுந்தரிக்கு தெரிய வர போகிறது. அதன் ப்ரொமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ஒருவழியா சிக்கிட்டான்யா!