நடிகருடன் ஓடிப்போக பிளான்..நடிகை ராதாவுக்காக சண்டைப்போட்ட நடிகர்கள்.. சீக்ரெட் உடைத்த பிரபலம்..
நடிகை ராதா
80, 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்து, ரஜினி, கமல், கார்த்திக், விஜயகாந்து உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் இடத்தில் இருந்தவர் நடிகை ராதா. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
நடிகை ராதா குறித்த தகவல்கள் பலரும் கூறி வரும் நிலையில், பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் அளித்த பேட்டியில் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், உத சந்திரிகா தான் ராதாவின் உண்மை பெயர்.
கார்த்திக்குடன் காதல்
ராதாவின் வளர்ச்சிக்கு அவரது சகோதரி அம்பிகாவும் ஒரு காரணம். கார்த்திக்கும் ராதாவும் இணைந்து நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர, இரண்டு பேரும் ஓடிப்போக பிளானும் போட்டாதாக பேச்சு எழுந்தது. அந்த சமயத்தில் ராதாவின் தாய் தான் அறிவுரை கூறியிருக்கிறார். அவர் காங்கிரஸை சேர்ந்த பிரபல பேச்சாளராக இருந்தார்.
கார்த்திக்கிற்கு பின் சிரஞ்சீவியுடன் ராதாவுக்கு காதல் ஏற்பட்டது. ராதாவை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்று நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கும் சிரஞ்சீவிக்கும் இடையே பயங்கர சண்டைக்கூட வருமாம்.
இதையெல்லாம் கடந்துதான் ராதா 1991ல் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இப்போது தொழிலதிபராக மாறியிருக்கிறார் என்று தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.