திரிஷா வழக்கு தொடர்ந்தாரா அல்லது புகார் அளித்தாரா? நடிகை காயத்ரி ரகுராமின் கருத்து..
மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய உதயநிதி, முதலமைச்சர் விஜய்யை, நடிகை திரிஷாவுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

உதயநிதியின் கைதை கண்டித்து, அவர் பேசியதை எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில், நடிகை குஷ்பூ, பாடகி சின்மயி, கஸ்தூரி உள்ளிட்டவர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராம், உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன டபுள் மீனிங் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை என்ற கேள்வியை கேட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

திரிஷா வழக்கு தொடர்ந்தாரா
காயத்ரி வெளியிட்ட பதிவில், திரிஷா வழக்கு தொடர்ந்தாரா அல்லது புகார் அளித்தாரா? உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சை திரிஷா புரிந்துகொண்டாரா? அந்த இரட்டை அர்த்தம் என்ன? எனக்கு அது புரியவில்லை... தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காகப் பெண் பாலினத்தைக் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக காவிரி விவகாரத்தைத் திசைதிருப்ப என்று கூறியிருக்கிறார். இதற்கு பலரும் காயத்ரியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள்.
திரிஷா வழக்கு தொடர்ந்தாரா அல்லது புகார் அளித்தாரா? உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சை திரிஷா புரிந்துகொண்டாரா? அந்த இரட்டை அர்த்தம் என்ன? எனக்கு அது புரியவில்லை... தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காகப் பெண் பாலினத்தைக் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக காவிரி விவகாரத்தைத்…
— Gayathri Raguramm - Say No To Drugs (@Gayatri_Raguram) August 4, 2026