காதலிக்கும் போது மனைவிக்கு கொடுத்த வாக்குறுதி.. நம்ப வைத்து ஏமாற்றிய உதயநிதி

Udhayanidhi Stalin Gossip Today Kiruthiga Udhayanidhi Kalagathalaivan
By Edward Nov 19, 2022 04:45 PM GMT
Report

தமிழகத்தில் சேப்பாக்கம் தொகுதியின் எம் எம் ஏ வாகவும், சினிமாவில் நடிகர், விநியோகஸ்தர் என்று ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தகுந்த நடுநிலையில் பார்த்து கொண்டு வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் , விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர்களது படங்களை வெளியிட்டு வருகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம். அப்படி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் பேட்டிக்கொடுத்தும் வந்த உதயநிதி ஒரு பேட்டியில் மனைவியை பற்றி பேசியிருந்தார்.


அப்போது நடிக்கப்போகிறேன் என்று கூறினது என்ன திடீரென என்று கிருத்திகா கேட்டார். அரசியலுக்கு போக மாட்டேன் என்று தானே காதலிக்கும் போது சொன்னேன் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே என்று கூறினேன்.

அதன்பின் தான் நடிக்க ஓகே சொன்னார். ஆனால் இப்போது அரசியலில் வரமாட்டேன் என்று சொன்ன வாக்குறுதியை மீறிவிட்டேன் என்று காமெடியாக சிரித்தபடி கூறியிருக்கிறார்.

மேலும் மனைவி தற்போது அரசியலிலும் சினிமாவிலும் எப்படி நடந்து கொள்கிறேன் என்று சில அறிவுரைகளையும் கருத்துக்களையும் கூறி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சமீபகாலமாக பல தகவல்களை சகஜமாக உதயநிதி கூறி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.