உலகநாயகனுக்கு பின் லிப்லாக் அடிச்சது இந்த நடிகர்தான்.. உண்மையை கூறிய உதயநிதி ஸ்டாலின்...

Kalaiyarasan Kamal Haasan Udhayanidhi Stalin Gossip Today
By Edward Nov 16, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்றும் அரசியலில் எம் எல் ஏ வாகவும் இருந்து கோலிவுட் சினிமாவில் முக்கிய பங்காற்றி வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

கலகத்தலைவன்

அவர் நடித்து பல படங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து சமீபத்துல் கலகத்தலைவன் என்ற படத்தில் இயக்குனர் மகிழ்த் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பல பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் படக்குழுவோடு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி, பல விசயங்களை வெளிப்படையாக கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் கலகத் தலைவன் படத்தில் ஒரு லிப் லாக் சீனை 2 நாட்கள் எடுத்தார் மகிழ் திருமேனி என்று கூறினார்.

லிப்லாக்

மேலும் படத்தில் நடித்த கலையரசன் இப்படத்தில் கர்ப்பமாக இருக்கும் நடிகையுடன் நடித்திருக்கிறார் என்று தெரிவித்தார். கலையரசன் மெட்ராஸ், சார்ப்பட்டா பரம்பரை படம் உள்ளிட்ட பல படங்களில் லிப்லாக் சீனில் நடித்திருக்கிறேன் என்று கூறினார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின், கமல் ஹாசன் சாருக்கு அடுத்து அதிக லிப்லாக் அடித்த நடிகர் என்றால் அது கலையரசன் தான் என்று கிண்டல் செய்து கலாய்த்துள்ளார். இப்படி சக நடிகர்களை பற்றியும் சகஜமாக பேட்டிக்கொடுத்து வருகிறார் உதயநிதி.