உதயநிதி கூறியும் தலைக்கணத்தில் ஆடிய சிவகார்த்திகேயன்.. எதையும் கேட்காமல் டான் படக்குழு செய்த செயல்..

Sivakarthikeyan Udhayanidhi Stalin Don Kalagathalaivan
By Edward Nov 17, 2022 12:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் போன்ற 100 கோடி வசூல் படத்திற்கு பின் பிரின்ஸ் படத்தில் அனுதீப் இயக்கத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி தீபாவளி ட்ரீட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு படுதோல்வியை சந்தித்தது.

உதயநிதி ஸ்டாலின்

கதையில் சொதப்பியதால் பிரின்ஸ் படம் படுதோல்வியும் பல கோடி நஷ்டத்தையும் கொடுத்தது. இதன்பின் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில் கலகத்தலைவன் படத்தில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அதில் பல பேட்டிகளில் படத்தினை வெளியிடும் ரெட் ஜெயண்ட் பற்றியும் பேசியிருந்தார். அப்போது எந்த படத்தை பார்த்து வேண்டாம் என்று ஒதுக்கினீர்கள் என்ற கேள்விக்கு, டான் படம் தான் என்று பல இடங்களில் கூறியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

எதையும் கேட்காத சிவகார்த்திகேயன்

படத்தினை முதலில் பார்த்தபோது கல்லூரி காட்சிகள் ஒருசிலவற்றை ட்ரிம் செய்யுங்கள் என்று சிவகார்த்திகேயனிடம் கூறினேன். ஆனால் சிவகார்த்திகேயன் ட்ரிம் செய்யாமல் 3 நிமிட காட்சியை திணித்து படத்தினை காட்டினார். நான் ட்ரிம் தானே செய்ய சொன்னேன் என்று சிவகார்த்திகேயனிடம் கூறியும் சரியாக வரும் என்று ஸ்ட்ராங்காக சொன்னார்.

என்னவோ பண்ணுங்க என்று படத்தினை வெளியிட்டோம். ஆனால் எதிர்ப்பார்க்காத வகையில் படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பும் பெற்றது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.