சிவகார்த்திகேயன் நடித்த படத்தை வேண்டாம் என கூறிய அரசியல் வாரிசு.. படம் சூப்பர்ஹிட்

Sivakarthikeyan Udhayanidhi Stalin Priyanka Arul Mohan
By Kathick Jun 07, 2022 06:00 PM GMT
Report

அட்லீயின் துணை இயக்குனராக இருந்து தற்போது அறிமுக இயக்குநராகியுள்ள சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

நகைச்சுவை, செண்டிமெண்ட் என மக்களின் மனதை கவர்ந்த டான் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதையை முதன் முதலில் கேட்டவர் பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின் தானாம். அப்போது அவர் இந்த கதையில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

ஏனென்றால் , இப்படத்தில் இடம்பெற்ற பள்ளி பருவ காட்சியும், அப்பா செண்டிமெண்ட் காட்சியும் தன்னால் சிவகார்த்திகேயன் அளவிற்கு பண்ணியிருக்க முடியாது என்பதன் காரணமாக இப்படத்தை நிராகரித்ததாக உதயநிதி கூறியுள்ளார்.