பல வருட பகையை மறக்காமல் மறுபக்கத்தை காட்டும் உதயநிதி.. சங்கரை ஓவராக அலைக்கழிக்கும் நிலை?

Kamal Haasan Udhayanidhi Stalin Shankar Shanmugam
By Edward Aug 13, 2022 08:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர், 2.0 படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தினை ஆரம்பித்தார். சில சிக்கல்களால் படப்பிடிப்பு 2 ஆண்டுகள் தள்ளிக்கொண்டே சென்றுள்ளதால் தெலுங்கு பக்கம் திரும்பி ராம் சரணை இயக்கி வருகிறார்.

ஆர்சி15 என்ற பெயரிப்படாத படத்தில் கியாரா அத்வானி லீட் ரோலில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடைபெற்று வரும் திரைப்படத்துறையினர் நடத்து ஸ்ரைக்கால் தெலுங்கு பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சங்கர் படம் என்றாலே பிரம்மாண்டமான செட் போட்டும் வெளிநாட்டு ஷூட்டிங்கும் இருப்பது வழக்கம். ஆனால் சென்னை எழிலகத்தில் பெரும்பாலான ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்படும்.

தற்போது சங்கர் அவர்களுக்கு அங்கு ஷூட் எடுக்க அனுமதி மறுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது இப்பமட்டும் நடக்கவில்லையாம் பலமுறை இயக்குனர் சங்கர் கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறதாம். சமீபத்தில் கூட அரசியல் வாரிசின் படம் கூட இங்கு ஷூட் எடுக்கப்பட்டதால் சங்கர் அவரிடமும் சிபாரிசு கேட்டும் கொடுக்கவில்லையாம்.

அதற்கு காரணம், சங்கர் இயக்கிய முதல்வன், ஜெண்டில்மேன், இந்தியன் போன்ற படங்கள் தான். 1996 காலக்கட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியாக இருந்துள்ளது. அப்போது அப்படத்தில் ஊழல் பற்றியும் அதிகமாக அரசு அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இருந்தது.

அப்படியிருக்கையில் எந்திரன் 2 படத்தின் ஷூட்டிங்கிற்காக லாக்டவுன் சமயத்தில் எழிலகத்தில் ஷூட் செய்ய அனுமதி கேட்டுள்ளார். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டாராம் உதயநிதி ஸ்டார்லின்.

தற்போது ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தை பார்த்தும் எம் எல் ஏவாக இருந்தும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். இப்படமும் எழிலகத்தில் தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.