சூப்பர் உதய்னா.. இனி யாரும் கிட்ட வர முடியாது!
Vikram
Udhayanithi Stalin
By Parthiban.A
பல லாக்டவுன்களால் சினிமா துறை அதிகம் சிக்கல்களை சந்தித்து தற்போது தான் படிப்படியாக மீண்டு வர தொடங்கி இருக்கிறது. தற்போது வரிசையாக பல பெரிய படங்கள் ரிலீஸ் ஆக தொடங்கி இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நடிகரும், எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட் மூவிஸ் நிறுவனம் தான் பல பெரிய படங்களை கைப்பற்றி வருகிறது.
அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து அடுத்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் உதயநிதியின் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளனர்.
"சூப்பர் உதய்னா அடுத்த நாலு வருஷத்துக்கு நம்ம மட்டும் தான் படம் ரிலீஸ் பண்ணனும். . எவனும் கிட்ட வரக்கூடாது. ." என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்து இருக்கிறார்.