மகளை திருமணம் செஞ்சிக்கிறீங்களா!! நடிகருக்கு ஷாக் கொடுத்த ஸ்ரீதேவியின் தாய்...
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் பல மொழிகளில் 80, 90களில் நடித்து டாப் ஹீரோயினாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இரு மகள்களை பெற்றெடுத்தார். கடந்த 2018ல் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அங்கு தங்கிய ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அவரின் மரணத்திற்கு பின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜேடி சக்ரவர்த்தியை ஒருமுறை ஸ்ரீதேவியின் உறவினரும் நடிகையுமான மகேஸ்வர் வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறாராம் அப்போது ஸ்ரீதேவி வீட்டில் இல்லையாம்.

அந்த நேரத்தில் சக்ரவர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதேவி தாய், நீங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று நேரடியாக கேட்டிருக்கிறாராம். இதை எதிர்பார்க்காத சக்ரவர்த்தி வாயடைத்து நின்றிருக்கிறாராம். இந்த விஷயத்தை ஒரு பேட்டியொன்றில் சக்ரவர்த்தியே பகிர்ந்துள்ளார்.