என் பொண்டாட்டிய லவ் பண்றியான்னு சூர்யா மிரட்டுனாரு!! டூரிஸ்ட் ஃபேமிலி பிரபலம் ஓபன் டாக்
சூர்யா - ஜோதிகா
தென்னிந்திய சினிமாவில் சிறந்த ஜோடிகளாக திகழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகா இருவரும், படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள். இருவரும் மாறி மாறி அவர்களின் கேரியரில் சப்போர்ட்டாக இருந்து வருகிறார்கள்.
இந்த ஜோடி குறித்து பல பிரபலங்கள் பேட்டிகளில் கலந்து கொண்டு அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்வதுண்டு. சமீபத்தில், ஜோதிகாவுடன் ராட்சசி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவன் கமலேஷ் பேட்டியொன்றில் ஜோதிகா குறித்து பகிர்ந்துள்ளார்.
சிறுவன் கமலேஷ்
சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவர்களின் மகனாக கமலேஷ் நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷனுக்கான பேட்டியில் தான் ஜோதிகாவுடன் ராட்சசி படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ராட்சசி படத்தில் நடித்தபோது ஒருமுறை சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார்.
சூர்யா மிரட்டுனாரு
வந்ததும், யார் அவன் கதிர்(ராட்சசி படத்தில் கமலேஷின் ரோல்), கூப்பிடுங்க என்று சொன்னார். வந்தவர் ஏன் இப்படி கேட்கிறார் என குழப்பத்துடன் அவர் முன் சென்று நின்றேன். என்னை பார்த்து அவர், என்ன என் பொண்டாட்டிய நீ லவ் பண்ணுறியா? நைட் உண்னை பத்திதான் பேசுறா என்று சொன்னார்.
அதற்கு நானோ, இல்லை சார் அப்படி நடிக்க சொன்னாங்க நடிச்சேன் என்றதற்கு, அட சும்மா மிரட்டி பார்த்தேன்பா, சாப்பிட்டியா என்று கேட்டார். இப்படி சூர்யா சார் செம ஜாலியான ஆள், அதேபோல் ஜோதிகாவும் என்னுடைய பிறந்தநாளுக்காக ஒட்டுமொத்த செட்டுக்கும் பிரியாணி போட்டார், அவரும் என் மீது பாசமாக இருப்பவர் தான் என்று கமலேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.