GOAT பட நடிகை மீனாட்சி செளத்ரியின் மறுப்பக்கம் என்ன தெரியுமா!! இதையெல்லாம் செய்திருக்காராம்..
மீனாட்சி சவுத்ரி
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்து, விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதை தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் நடிகர் துல்கர் சல்மானின் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
நடிகையாக மட்டுமின்றி பல துறைகளில் சாதனை படைத்திருக்கிறார் நடிகை மீனாட்சி.
நீச்சல், பூப்பந்து வீராங்கனை - மருத்துவர்
சண்டிகரில் உள்ள செயின்ட் சோல்ஜர் இன்டர்நேஷனல் கான்வென்ட் பள்ளியில் பயின்ற மீனாட்சி, பஞ்சாபின் தேரா பாசியில் உள்ள தேசிய பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் பெற்று, பல் மருத்துவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
மாநில அளவிலான நீச்சல் மற்றும் பூப்பந்து வீராங்கனையாக பல போட்டிகளில் விளையாடி தங்கப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.
ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் முடிசூட்டப்பட்டார். மேலும் மிஸ் இந்தியா 2018 இன் முதல் ரன்னர் அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நடிகை அவதாரம் எடுத்து நடித்து வருகிறார்.