என்னை காயப்படுத்தாது..நான் வித்தை தெரிந்தவள்!! நடிகை மிருணாளினி ரவி..

Mirnalini Ravi Tamil Actress Actress
By Edward Apr 01, 2026 08:30 AM GMT
Report

மிருணாளினி ரவி

டிக் டீக் வீடியோக்களை பகிர்ந்து அதன்மூலம் பிரபலமானவர் தான் நடிகை மிருணாளினி ரவி. விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்த மிருணாளினி, சாம்பியன், எனிமி, எம்ஜிஆர்.மகன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் மிருணாளினி, தனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் எது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

என்னை காயப்படுத்தாது..நான் வித்தை தெரிந்தவள்!! நடிகை மிருணாளினி ரவி.. | Unnecessary Criticism Words Cant Hurt Me Mrinalini

நான் வித்தை தெரிந்தவள்

மிருணாளினி ரவி கூறுகையில், எங்கோ இருந்த என்னை அழைத்து வந்து, சம்பளமும் கொடுத்து, பிரபலமும் ஆக்கி, ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கையும் ஏற்படுத்தி தருகிறார்கள். அப்படிப்பட்ட இந்த சினிமாவில் இருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய கெளரவம்.

என்னிடம் யாராவது வந்து நீ சரியாக நடிக்கவில்லை என்று கூறினாலும் எனக்கு கோபம் வராது. என்னை நான் மாற்றிக்கொள்ளும் வித்தை தெரிந்தவள் என்பதால், தேவையற்ற எந்த விமர்சனமும், வார்த்தைகளும் என்னை காயப்படுத்தாது என்று கூறியிருக்கிறார்.