வனிதாவை தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்திக்கு என்ன ஆச்சு! பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற இதுதான் காரணமா?

simbu vanitha sureshchakravarthy biggbossultimate
By Edward Mar 23, 2022 03:15 PM GMT
Report

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசனுக்கு பிறகு ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.

ஆரம்பத்தில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இருந்த 5 போட்டியாளர்களில் ஒருசிலர் மட்டும் இந்நிகழ்ச்சியில் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அதில் எவிக்‌ஷனில் வெளியேறாமல் உடல் நிலை சரியில்லாமல் வனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கடும்போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தியின் வைல்ட் கார்ட் எண்டிரி சிறப்பாக அமைந்து வந்தது.

கோழிக்கூவுது உள்ளிட்ட பல டாஸ்க்க்குகள் அவரால் சிறப்பாக சென்றதை அடுத்து, சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டினைவிட்டு வெளியேறி இருக்கிறார். கார் டாஸ்க்கில் நீரில் நனைந்ததால் அதை தாக்குபிடித்தும் உடல்நிலை மோசமடைந்ததாகவும் இதனால் தானே வாக்கவுட் என்று அறிவுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படியிருக்கையில் சுரேஷ் சக்ரவர்த்தி வயதில் சிறியவராக இருக்கும் நடிகர் சிம்பு கடந்த வாரம் கூறிய அறிவுரைகள் பிடிக்காமல் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.