3 நிமிஷத்துக்கு 3 கோடியா!! வேறு வழியில்லாமல் பிரபல நடிகையை புக் செய்த தயாரிப்பாளர்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. சமீபத்தில் தமிழில் சரணன் அண்ணாச்சி நடித்த லெஜண்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
படம் தோல்வியானதால் தமிழில் அடுத்த வாய்ப்பை இழந்து பாலிவுட் பக்கமே சென்றுவிட்டார். படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு வரும் ஊர்வசி ரவுத்தேலாவிடம் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ஒரு படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்டுள்ளனர்.
தயாரிப்பு தரப்பினர் பேச்சுவார்த்தையின் போது மிகவும் ஊர்வசியால் ஷாக்காகிவிட்டார்களாம்.
அதாவது அப்பாடல் வெறும் 3 நிமிடம் தான் இருப்பதால் அவர் 3 நிமிடம் மட்டும் ஆட வேண்டும். ஆனால் ஊர்வசி ஒரு நிமிடத்திற்கு 1 கோடி என்று 3 நிமிடத்திற்கு மூன்று கோடி சம்பளமாக கேட்டிருக்கிறாராம்.
இந்தியாவிலேயே ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி என்று பெறும் முதல் நடிகை ஊர்வசி தானாம்.
இதற்கு முன் மெகா சூப்பர் ஸ்டார் வால்டர் வீரய்யா படத்திற்காக ஆட்டம் போட்ட ஊர்வசி அப்பாடலுக்கு 2 கோடி ரூபாயை கேட்டு பெற்றிருக்கிறார்.
தற்போது ராம் பொத்தினினேனியின் படத்திற்கு 1 கோடி ரூபாயை ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது.
