என்னை குடிக்கு அடிமையாக்கியதே அவர் தான்..40 வயதில் 2ம் திருமணம் குறித்து பேசிய ஊர்வசி
Urvashi
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.
தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஊர்வசி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், என் திருமணம் விவாகரத்தில் முடிய குடிப்பழக்கம் தான் காரணம். எனக்கு சரக்கு ஊற்றித்தந்தவரே முதல் கணவர் மனோஜ் தான். கடைசியில் நான் குடிக்கு அடிமையாகிவிட்டேன்.
அந்த சமயத்தில் நான் மனஅழுத்தத்தில் இருந்தேன். அப்போது என் குடும்ப நண்பர் சிவபிரசாத் என்பரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன்.
நான் அவரை திருமணம் செய்யும் போது என்னுடைய வயது 40. இதனால் பலரும் என்னை விமர்சித்தார்கள். ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று ஊர்வசி கூறியுள்ளார்.