நடிச்சது ரெண்டே படம் தான்!! 18 வயதான அஜித் ரீல் மகள் அனிகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..
மலையாள சினிமாவில் நடிகர் ஜெயராம், நடிகை மம்தா மோகன் தாஸ் நடிப்பில் உருவான கத தொடருன்னு என்ற படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன். இப்படத்தினை அடுத்து மலையாள படங்களில் நடித்து பிரபலமான அனிகா, நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமாகினார்.
அதன்பின் பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன், தி கிரேட் ஃபாதர் போன்ற படங்களில் பள்ளி சிறுமியாக நடித்து வந்தார். இதனைதொடர்ந்து நடிகர் அஜித் - நயன் தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் கொடுத்த விஸ்வாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி லுக்கிற்கும் சென்றார்.
சிறுவயதிலேயே நடிகை நயன்தாரா லுக்கில் கவர்ச்சியாக மாறிய அனிகா 17 வயதில் கதாநாயகியாக கமிட்டாகினார். 18 வயதாகி ஹீரோயின் அவதாரம் எடுத்த அனிகா, நடிகையான முதல் இரண்டு படங்களில் படுக்கையறை மற்றும் நடிகருடன் முத்தக்காட்சியில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் அனிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் சிறு ரோலில் நடிக்க லட்சங்களில் சம்பளம் வாங்கிய அனிகா, 2019ல் ஒரு படத்திற்காக 1.4 கோடியும் 2020ல் 2.5 கோடி சம்பளமாகவும் பெற்றார் என்ற தகவல் வெளியானது. ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் ஏற்றிக்கொண்டே போகும் நிலையில், ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
சொந்த வீடு, கார் என்று இருக்கும் அனிகா விளம்பரங்களில் நடித்தும் காசு சம்பாதித்து வருகிறார். மேலும் அனிகா சுரேந்திரனின் மொத்த சொத்து மதிப்பு சிமார் 16 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.