பிரிந்து சென்ற காதல் மனைவி!! ஃபீல் பண்ணி டி ராஜேந்தர் செய்த சம்பவம்..
டி ராஜேந்தர்
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் டி ராஜேந்தர். அவரின் உயிருள்ளவரை உஷா படம் பிப்ரவரி 13 ஆம் தேதி ரீரிலிஸாகவுள்ளது.

சரிதா, நளினி, ராதா ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மிகப்பெரிய ஹிட்டிற்கு காரணம் பாடல்கள் தான். அப்படத்தின் ஒரு பாடலை, டி ராஜேந்தர் தன் மனைவியை பிரிந்த வேதனையோடு எழுதியிருக்கிறார்.
பிரிந்து சென்ற காதல் மனைவி
அப்படம் உருவான சமயத்தில்தான் டி ராஜேந்தருக்கு கல்யாணமாகியிருந்தது. திருமணமான புதிதில் அவருடைய மனைவி உஷா, அவரை பிரிந்து சில நாட்கள் அமெரிக்கா சென்றிருந்தாராம்.

அவர் பிரிந்து சென்ற சோகத்தில் டி ராஜேந்தர், சில வரிகளை எழுதியிருக்கிறார். கங்கை கரை காத்தே நொல்லு மங்கை தனை பார்த்தால் சொல்லு என்று எழுதி இருக்கிறார். அதேபோல் அப்பாடலை கே ஜே யேசுதாஸிடம் கூறி பாட வைத்திருக்கிறார். இந்த உணர்வுப்பூர்வமான சம்பவத்தை டி ராஜேந்தர் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.