அம்மாவான மூலையில உக்காருனுமா? மோசமாக பேசிய பெண்ணை வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை..

Bigg Boss Vijayalakshmi Feroz
By Edward May 17, 2022 10:23 AM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி சீரியல் நடிகையாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலப்படுத்திக்கொண்டவர் நடிகை விஜயலட்சுமி. சென்னை 28 படத்தில் நடித்திருந்தாலும் போதிய வரவேற்பு பெறாமல் இருந்த விஜயலட்சுமி பிக்பாஸ் 2வது சீசனில் வைல்ட் கார்ட் மூலம் நுழைந்தார்.

90 நாட்களுக்கும் மேல் இருந்த விஜயலட்சுமி வெளியேறி பின் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பின் வேறொரு தொலைக்காட்சி நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றியும் ஒரு கோடி பரிசையும் தட்டித்தூக்கினார்.

நிகழ்ச்சியில் வென்றது சர்ச்சையானதை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பெண், இந்த ஆட்டம் தேவையா ஒரு அம்மாவா இருக்க என்று விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த விஜி, அம்மான்னா மூலைல உட்கார்ந்துகிட்டு அழனுமா?. ஐயோ, அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு இனிமே எல்லாருக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன் நான் ஒரு தியாகினு.

அத நீ பண்ணு உனக்கு சிலை வைப்பாங்க, தியாக செம்மல்னு. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது குழந்தை பெற்ற பல அம்மாக்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிவார்கள்.

உன்ன மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்க டிப்ரஷன்ல இருக்காங்க. மற்றவர்களை எடை போடுவதை நிறுத்துங்கள்.

நீங்க குடும்ப குத்து விளக்காக இல்லை இதெல்லாம் என்னால பண்ண முடியாதுன்னு ஒரு பொறாமைல கமெண்ட் பண்ணி இருக்கீங்களான்னு தெரியல மேடம் எது எப்படியோ உன் அட்வைஸ் கூந்தலை நீங்களே பின்னி பூ வைத்து கொள்ளவும் என்று கூறி கருத்தினை பகிர்ந்துள்ளார்.

இந்த மெசேஜை அவரது சமுகவலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கினாலும் சிலர் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அம்மாவான மூலையில உக்காருனுமா? மோசமாக பேசிய பெண்ணை வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை.. | V