மகனின் வாழ்க்கை போச்சு.. நம்ப வைத்து ஏமாற்றிய வடிவேலு!! பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..
நடிகர் வடிவேலு, சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பல வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் பிரபல திரைப்ப தயாரிப்பாளர் வி சேகர், வடிவேலு குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நடிகர் வடிவேலு கேப்டன் விஜயகாந்தை அவ்வளவு கீழ்த்தரமாக மேடையில் பேசினார். விஜயகாந்த் நிறைய பேருக்கு உதவி செய்தார். ஆனால் வடிவேலு அதை எல்லாம் மறந்துவிட்டு, அவரை தாறுமாறாக பேசினார். அவரால் எனக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
சரவணா பொய்யன் என்ற படத்தை நான் எடுத்தேன். அதில் என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன். அந்த படத்தில் வடிவேலு நடிக்கிறேன் என்று சொன்னார்.என்னை நீங்கள் உங்களது படங்களில் நடிக்க வைத்து தூக்கி விட்டீர்களோ, அதே போல உங்களது மகனையும் நான் தூக்கி விடுகிறேன் என்று வடிவேலு சொன்னார்.

நானும் படம் வேலையை ஆரம்பித்தேன் கடைசியில் வடிவேலு அரசியலுக்கு சென்றதால் அந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி போனது. பிரச்சாரத்திற்குச் சென்றவர் அங்கு சும்மா இல்லாமல், விஜயகாந்த் குறித்து தாறுமாறாக பேசினார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து வடிவேலு, மதுரை சென்றுவிட்டேன், இனி ஒரு வருடத்திற்கு அங்கு வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார்.
இதனால் வடிவேலுக்கு பதிலாக கருணாசை கமிட் செய்தேன் படம் தோல்வியை சந்தித்தது. என்னுடைய மகனின் வாழ்க்கையானது அதில் பாதிக்கப்பட்டது என்று பிரபல தயாரிப்பாளரான வி சேகர் கூறியுள்ளார்.